15வது உலகத்தமிழ் இணைய மாநாட்டிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!

15வது உலகத்தமிழ் இணைய மாநாடு


“உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்” - "உத்தமம்" எனும் பெயரில் இயங்கி வருகிறது. 1997மாவது ஆண்டில் திரு. கோவிந்தசாமி அவர்களின் முழு முயற்சியில் வித்திடப்பட்டு 2000மாவது ஆண்டில் திரு. சுஜாதா, திரு. தமிழ்க்குடிமகன், பேராசிரியர் அனந்தகிருட்டிணன் ஆகியோரின் அன்பு வழியில்இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பதிவு செய்யப்பட்டுத் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் "உத்தமம்" அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் உலகின் பல நாடுகளில் தொடர்ந்து தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வருகிறது "உத்தமம்" அமைப்பு. இதுவரை பதினான்கு உலகத்தமிழ் இணைய மாநாடுகளை "உத்தமம்" பல்வேறு நாடுகளில் நடத்தியுள்ளது. ஒவ்வொரு மாநாடும் பல தமிழ் ஆசிரியர்களுக்கும் கணினித் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கும் தங்களது வளர்ச்சிக்கு பல வழியிலும் வழி வகுத்தது.

இப்பயணத்தின் தொடர்ச்சியாக வரும் செப்டம்பர் 9,10,11 ஆகிய நாட்களில் தமிழகத்தின் பாரம்பரிய மிக்க "காந்திகிராமியப் பல்கலைக் கழகத்தில் " 15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு நடைபெற உள்ளது. அதன் கருப்பொருள் "கணினியெங்கும் தமிழ், கணினியெதிலும் தமிழ்’’ என்பதாகும். கணினி வழி தமிழ் பல வகையிலும் வளர வேண்டும் எனும் எண்ணத்தோடு இம்மாநாட்டின் இக்கருப்பொருளைக் கொண்டோம். இம்முயற்சி உங்களது தொடர்ந்த முயற்சியோடு பெருகவேண்டும்! வளரவேண்டும்! உலகளாவிய நிலையில் பெருமை பெறவேண்டும்.


இம்மாநாடு ஆய்வு அரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி அரங்கம் என மூன்று பிரிவுகளாக செயல்படஉள்ளது. தமிழை பல கோணங்களில் காணும் முயற்சி இது! அன்புடையீர், வருகை தாருங்கள்! நம் தமிழை வளர்ப்போம்! தமிழர்களாகிய நாம் இவ்வழியில் வளர்வோம்!

"ஆய்வு அரங்கம்"

இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் திரு. ஏ.ஜி.இராமகிருட்டிணன் ஆய்வுக்குழுத் தலைவராக இருந்து இம்மாநாட்டை வழி நடத்தி வருகிறார். இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் திரு. சுரேஷ் சுந்தரம், ஹைதராபாத் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. நாராயணமூர்த்தி, சென்னை SSU பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் திரு. நாகராஜன் ஆகியோர் ஆய்வுக்குழுவின் அங்கத்தினராக உள்ளனர்."மக்கள் அரங்கம்"

15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாட்டின் ஓர் அங்கமாகச் செல்பேசிச் செயலிகளை உருவாக்குதல், இயந்திரக் கற்றல், கட்டற்ற மென்பொருள்கள் ஆகிய தொழில்நுட்பங்களில் இலவசப் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் அதில் கலந்து கொள்ளலாம்."கண்காட்சி அரங்கம்"

மக்கள் அரங்கையும், கண்காட்சி அரங்கையும் ஒரே இடத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. புதிய தொழில்முனைவோர் தங்கள் மென்பொருட்கள் சார்ந்த அம்சங்களை மக்களிடையே பரப்ப இதுவொரு பொன்னான வாய்ப்பு. கண்காட்சி அரங்கில் பங்கேற்கப் பல நிறுவனங்கள் இசைந்துள்ளன. மேலும் சில நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.


வளர்ந்து வரும் நவீன உலகில் "தமிழ்க்கணிமை" தனித்துவமாக ஒளிரவும், மிளிரவும் இது போன்ற முயற்சிகள் அவசியம். அவற்றுக்கு முன்னின்று ஏற்பாடு செய்யும் "உத்தமம்" அமைப்புக்கு உங்கள் பங்களிப்பும், ஆதரவும் என்றென்றும் தேவை.

தமிழ் வளர! தமிழர்கள் வளர! இம்முயற்சிக்குத் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும்! நாம் அனைவரும் இணைந்து இணையம் வழித் தமிழையும் தமிழர்களையும் வளர்க்க முனைவோம்!

தொடர்ந்து இணைந்திருங்கள்! தொடர்ந்து வளரட்டும் நம் தமிழ்! கணினி வழி! இணையம் வழி!வளர்பிறை போல வழிவழிப் பெருகி வளர்ந்து வரும் இந்நிறுவனம் என்றென்றும் முழு நிலவாக இயங்க வேண்டும். மலர் இலகின! வளர் பரிதியின் ஒளி மணி மார்பை மிளிரச் செய்தது! தமிழ் மணி மிளிர வேண்டும்! தமிழ் இணைய நிறுவனம் ஒளிர வேண்டும்! இணைவோம்! இணைப்போம் அனைத்துத் தமிழர்களையும்!தமிழகத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் இணையம் வழி இணைவோம் இணையத் தமிழ் மாநாட்டில்!

தொடர்ந்து இணைந்திருங்கள்

இனிய நேரு
தலைவர்
உத்தமம்

ABOUT INFITT

Greetings from the Executive Committee Members, 2016-2018.
International Forum for Information Technology for Tamil (INFITT) is a non-profit, non-governmental organization registered in the US. The main objective of this organization is to bring together the professionals, enthusiasts, government entities, and other international organizations working toward the development and promotion of Information Technology for the Tamil language. INFITT conduct regular technical conferences related to Tamil computing around the world to promote the active participation of researchers and professionals who have a common interest on the research in Tamil computing. INFITT is a global non-profit non-govt. organization devoted to promoting Tamil computing. Officially registered as NPO in California, USA.

உத்தமம் பற்றி

உத்தமம் உறுப்பினர்கள் அனைவருக்கும் 2016-2018 ஆண்டு செயற்குழுவின் வணக்கங்கள் பல உரித்தாகுக.
அமெரிக்க நாட்டில் பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனம், “உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)” என்னும் பெயரில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் முக்கியக் குறிக்கொள்களில் ஒன்று தமிழ்த் தொழில் முனைவோர், தமிழ்க் கணினியாளர்கள், நிரலர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்க முனைவதாகும். இதன் உறுப்பினர்கள் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளனர். இந்நிறுவனத்தின் ஒரு முக்கிய நடவடிக்கை ஆண்டுதோறும் தமிழ் இணைய மாநாட்டை உலகெங்கிலும் பல நாடுகளில் தொடர்ந்து நடத்திவருவதாகும்.

Speakers

Workshop 1


Prof. Narayana Murthy Kavi

Professor, School of Computer and Information Sciences, and Department of Sanskrit Studies, ,

Workshop 2


Prof. T. Nagarajan

Prof. T. Nagarajan earned his PhD from IIT Madras in 2004. After his PhD, he joined the TeNet group of IIT Madras

Invited Speakers

Prof.Rajendran


Prof.Rajendran

Professor in Linguistics Centre for Excellence in Computational Engineering and Networking (CEN) Amrita University Coimbatore 641112 ,

Prof. Vasu Renganathan


Prof Vasu Renganathan

Member of the Board of Trustees of the South Asian Summer Language Institute (SASLI), South Asia Language Resource Center (SALRC), University of Chicago. ,

நன்கொடை

15வது உலகத்தமிழ் இணைய மாநாட்டுக்கு நன்கொடை அளிக்க விரும்புவர்கள்
காசோலையாகவோ அல்லது வரைவோலையாகவே Tamil Internet Conference பெயருக்கு அனுப்பலாம்,.

வங்கி விபரம்

For Bank Payment
Bank Name : Canara Bank
Account Name : Tamil Internet conference
Account number : 8500101013604
IFSC CODE: CNRB0008500
Address : GANDHIGRAM RURAL UNIVERSITY COMPUS- 624 302

அறிவிப்பு :

ஆய்வுக்கட்டுரையாளர்களின் கவனத்திற்கு:

15வது உலகத்தமிழ் இணைய மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு குறித்த தகவல்கள் இங்கே காணலாம்

தேர்வு பெற்ற ஆய்வுக்கட்டுரைகள்

--ஆய்வுக்குழு
15வது உலகத்தமிழ் இணைய மாநாடு

Conference Registration

TIC Conference Bank Details

For Bank Payment
Bank Name : Canara Bank
Account Name : Tamil Internet conference
Account number : 8500101013604
IFSC CODE: CNRB0008500
Address : GANDHIGRAM RURAL UNIVERSITY COMPUS- 624 302

Contact Details

ed@infitt.org
(or)
helpdesk@infitt.org

மக்கள் அரங்கம்

15 ஆவது உலகத்தமிழ் இணைய மாநாட்டின் ஓர் அங்கமாகச் செல்பேசிச் செயலிகளை உருவாக்குதல், இயந்திரக் கற்றல், கட்டற்ற மென்பொருள்கள் ஆகிய தொழில்நுட்பங்களில் இலவசப் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் அதில் கலந்து கொள்ளலாம்.

Pre-Conference Registartion


கண்காட்சி அரங்கம்

மக்கள் அரங்கையும், கண்காட்சி அரங்குகளையும் ஒரே இடத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. புதிய தொழில்முனைவோர் தங்கள் மென்பொருட்கள் சார்ந்த அம்சங்களை மக்களிடையே பரப்ப இதுவொரு பொன்னான வாய்ப்பு. கண்காட்சி அரங்கில் பங்கேற்கப் பல நிறுவனங்கள் இசைந்துள்ளன. மேலும் சில நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

Exhibition Stall Booking