Direct Zoom Participation
Join in the Conference via Zoom
For Face Book Live Visit
உத்தமம் (INFITT ) ஆண்டுதோறும் தமிழ் இணைய மாநாடு ஒன்றை நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. கொரோனா வைரஸ் காரணமாக அதிக அளவில் பயணக் கட்டுப்பாடுகள் இருப்பதால் இந்த ஆண்டிற்கான 19வது தமிழ் இணைய மாநாட்டினை மெய்நிகர் மாநாடாக நடத்தவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது. இந்த ஆண்டின் பதிப்பினை (19வது தமிழ் இணைய மாநாடு 2020) இலங்கை மொரட்டுவ பல்கலைக் கழகம், மற்றும் சேலம் பெரியார் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநாடு இணையவழி மெய் நிகர் மாநாடாக டிசம்பர் 11-13, 2020 தேதிகளில் நடக்கவுள்ளது. விரைவில் மேலும் விவரங்கள் அறிவிக்கப்படும்.