Call for Papers for the 19th Tamil Internet Conference 2020, [Virtual], Dec. 11-13, 2020.
International Forum for Information Technology in Tamil (INFITT),NLP Center ,University of Moratuwa ,Srilanka and Periyar University,India are pleased to announce that the next “Tamil Internet Conference 2020″ will take place Virtually during Dec11-13 , 2020. Dr. VasuRenganathan of the Univ. of Pennsylvania, USA and Prof.Gihan Dias of the NLP Center, University of Moratuwa, Srilanka have been named as Co-Chairs for the Conference Program Committee (CPC).
A call is made here inviting researchers involved in different aspects of Tamil Computing and Information Technology to send their paper for possible presentation in one of the technical sessions of the conference. The content should be an original piece of work. All papers will undergo peer-review and the decisions of the Program Committee on the acceptance will be final. Best papers and research work will be recognized with special certificates and prizes.
Tamil Internet Conference 2020, as in previous years, will address recent advances and challenges in all key areas of Tamil Computing and IT, particularly on applications with clear deliverables.
The following is a non-exclusive list of topics on which papers are invited:
-
- Natural Language Processing in Tamil (morphology, syntax, semantics, POS taggers, parsing, phonology, corpus linguistics, …)
- Machine Translation of texts between Tamil and English and other Indian languages
- Text-to-Speech, Voice recognition, and Speech corpora, particularly in applications for physically challenged (“assistive technologies)
- Search Engines, text analytics and data mining in “big data” for Tamil content
- Tamil enabling in portable devices and Tamil apps for use on Android and iOS devices
- Open Source Tamil software and Tamil Localization of CMS and other packages
- Smart word-processing that includes spell-checker, grammar-checker, …
- computer-aided teaching and learning of Tamil at all levels, Virtual classroom for Tamil teaching and Learning Management Systems LMS
- Smart access of the Tamil content on the Internet, digital libraries in Tamil,…
- Sentiment Analysis and Opinion Mining in Social media
- The submission should clearly indicate the work that has been done by the author (their group). The submission should be full paper (10 pages) . It can be in Tamil, English or bilingual (Tamil, English) but the Tamil text must be in Unicode encoding. . If at least one author does not pre-register and confirm attendance, the paper will be withdrawn and not included in the conference proceedings.
The full paper should be submitted through email (cpc2020@infitt.org) before 15th November 2020. Each submission will be acknowledged.
-
- Please take note of the following deadlines related to the conference hub paper presentations:
- 15 November 2020: Last date for online submission of the full paper.For more details and updated information, please visit the conference website: www.tamilinternetconference.org
Conference Program Committee
-
- Dr. Vasu Renganathan, Univ. of Pennsylvania, Philadelphia, USA (Chair)
- Prof.Gihan Dias , University of Moratuwa, NLP Center, Colombo, Srilanka (Co Chair)
தமிழ் இணைய மாநாடு, 2020 ( மெய் நிகர் ) டிசம்பர் 11-13, 2020
கட்டுரை அனுப்ப அழைப்பு
உத்தமம் நிறுவனமும் உத்தமம் (INFITT ) ஆண்டுதோறும் தமிழ் இணைய மாநாடு ஒன்றை நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த ஆண்டின் பதிப்பினை (19வது தமிழ் இணைய மாநாடு 2020) இலங்கை மொரட்டுவ பல்கலைக் கழகம் தேசிய மொழிகள் ஆய்வு மையம் , மற்றும் சேலம் பெரியார் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் வாசு அரங்கநாதான் மாநாட்டு நிகழ்ச்சிகள் குழுவுக்குத் தலைமைப் பொறுப்பையும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜிகான் டயஸ் அவர்கள் மாநாட்டு நிகழ்ச்சிகள் குழுவுக்கு இணைத்தலைவர் பொறுப்பையும் ஏற்றுள்ளனர்.
தமிழ் ஆய்வாளர்களிடமிருந்து தமிழ்க் கணினி மற்றும் கணினி வழி செய்தித்தொடர்பு குறித்தான புதிய ஆய்வுகளை மாநாட்டுக் கருத்தரங்கில் படைப்பதற்கான குறுகிய அல்லது முழுநீள கட்டுரைகளாக 10 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி அனுப்பும்படி கோரப்படுகிறது. கட்டுரை முறையாக மதிப்பீடு செய்யப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படும் எனத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வகையில் கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பது குறித்து நிகழ்ச்சிக் குழுவினரின் முடிவே இறுதி முடிவாக இருக்கும். ஆய்வுக்கட்டுரைகள் (10 பக்கங்களுக்கு மேற்படாத) நவம்பர் 15ம் திகதிக்கு முன்பதாக cpc2020@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
தமிழ் இணைய மாநாடு, 2020 முன்னர் நடத்தப்பட்ட மாநாடுகள் போலவே தமிழ்க் கணினி ஆய்வு மற்றும் கணினி வழி தமிழ் ஆய்வு போன்ற ஆய்வுகளின் சமீபத்திய வளர்ச்சிகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து அலசும் ஆய்வுக் களமாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். சிறந்த கட்டுரைகளுக்கும் ஆராய்ச்சிகளுக்குமான சிறப்புச் சான்றிதழ்களும் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
கீழ்க்காணும் தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
-
- கணினி வழி தமிழ் மொழி பகுப்பாய்வு (உருபனியல், தொடரியல், பொருளியல், இலக்கணப் பகுப்பாய்வு, தொடரியல் பகுப்பாய்வு, ஒலியியல், தரவு மொழியியல்)
- கணினி வழி மொழிபெயர்ப்பு – தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்திலிருந்தும் தமிழுக்கும். தமிழ் மற்றும் மற்ற இந்திய மொழிகள் உட்பட்ட கணினி வழி மொழிபெயர்ப்பு.
- கணினி வழி தமிழ் உரையிலிருந்து பேச்சு, தமிழ் மொழிப் பேச்சு அறிதல், தமிழ்ப் பேச்சுத் தரவகம் மற்றும் இவை தொடர்பான ஆய்வுகள். குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இவ்வகை ஆய்வுகள் குறித்த கட்டுரைகள்.
- தேடுபொறிகள், உரைப் பகுப்பாய்வு மற்றும் உரைத் தரவுகளை அலசும் ஆய்வுகள், மற்றும் பெரிய அளவிலான உரைத் தரவுகள் குறித்தான ஆய்வுகள்.
- கையடக்கக் கருவிகளில் தமிழ் மற்றும் ஆண்டிராய்டு, ஆப்பிள் கருவிகளில் தமிழ்.
- தமிழ்த் திறவு நிரலிகள் மற்றும் தமிழ்ப்படுத்தப்பட்ட பயன்பாட்டு நிரலிகள்
- சொற்பகுப்பு நிரலிகள், சொற்திருத்தி மற்றும் இலக்கணத் திருத்தி நிரலிகள்.
- கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
- தமிழ்க் கருத்தாய்வு மற்றும் சமூகதலங்களில் தமிழ்க் கருத்தாய்வு
- இணையப் பக்கங்களிலிருந்தும் மின்வடிவ நூலகத் தரவுகளிலிருந்தும் அறிவுசார் தேடல் நிரலிகள்.
- மேற்படி பொருள்களில் ஏதாவதொன்றில் முழுநீள கட்டுரைகளை 10 பக்கங்களுக்கு மிகாமல் தனிபட்ட நபரோ குழுவோ சமர்ப்பிக்கலாம். தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதப்படும் கட்டுரைகள் ஒருங்குறியில் எழுதப்பட்டவையாக இருக்கவேண்டும். ஏற்றுக்கொள்ளப்படும் கட்டுரைகளைப் பேராளர்கள் இணைய வழி படைக்கவேண்டும். இவ்வகையில் கட்டுரை படைப்போரில் ஒருவராவது மாநாட்டில் பங்குகொள்வதற்காக முன்பதிவு மூலம் உறுதிசெய்யவேண்டும். கட்டுரைகளை
- நவம்பர் 15 ,2020 திகதிக்குள் (15 November 2020) அனுப்பவேண்டும் எனவும் தெரியப்படுத்துகிறோம். உங்களது கட்டுரை வந்ததற்கான செய்தி உடனுக்குடன் உறுதிப்படுத்தப்படும்.
- இவண்,
- முனைவர். வாசு அரங்கநாதன், பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம், (மாநாட்டுக் குழுத் தலைவர்)
- பேராசிரியர் ஜிகான் டயஸ், இலங்கை மொரட்டுவ பல்கலைக் கழகம் தேசிய மொழிகள் ஆய்வு மையம் (மாநாட்டுக் குழுவின் இணைத்தலைவர்).